ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, தூண்டில் படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் புதிய படம் "அமளி துமளி". நகுல், சாந்தனு இருவரும் முதன்முறையாக சேர்ந்து நடித்துள்ளனர். ஹீரோயினாக "சுப்ரமணியபுரம்" சுவாதி நடிக்கிறார். நகுல், சாந்தனு இருவரில் சுவாதி யாருக்கு ஜோடி என்பது சஸ்பென்ஸ். படத்தில் ஐ.டி.யில் வேலை பார்க்கும் கேரக்டராம் சுவாதிக்கு. கவர்ச்சி, மேக்கப், அப்படி-இப்படினு எதுவும் இல்லாமல், பக்கத்து வீட்டு பெண் போல ஒரு லுக் வேண்டும் என்பதால் சுவாதியை தேர்வு செய்தாராம் இயக்குநர்.
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், காலேஜ் முடித்து, இரண்டு பசங்க சந்திக்கிற சம்பவங்கள் தான் படத்தின் கதை. பொதுவாக இளைஞர்களுக்கான படமா இந்தபடம் இருக்கும். எனக்கு மசாலா போட்டு கதை பண்ண தெரியாததால, வீட்டுக்குள் நடக்கும் கதையா, "அமளி துமளி" படத்தை எடுத்திருக்கேன் என்று கூறும் அதியமான், ஆஸ்திரேலியா, பிஜூ தீவுகளில் பாடல் காட்சிகளை படமாக்கி இருப்பதாக கூறுகிறார்.