மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் நமோ நாராயணா. தொடர்ந்து ஈசன், போராளி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டிப்புலி, நிமிர்ந்து நில், கொம்பன், ரஜினி முருகன், வாலு, அப்பா என பல படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்த இவர், தன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்த சமுத்திரகனி தற்போது இயக்கி நடித்து வரும் தொண்டன் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
கதைப்படி, இந்த படத்தில் சமூகத்துக்கு தொண்டும் செய்யும் வேடத்தில் சமுத்திரகனி மற்றும் விக்ராந்த் நடிக்கிறார்கள். ஆனால், பொதுமக்களுக்கு இவர்கள் செய்கிற உதவிகளைப்பார்த்து அரசியல்வாதியான நமோ நாராயணன் டென்சனாகி விடுவாராம். நீங்களே மக்களுக்கு தேவையானதை செய்து விட்டால் அப்போது ஆட்சியாளர்கள் நாங்கள் எதற்கு? என்று சமுத்திரகனியுடன் மோதுவாராம். அந்த மோதல் பெரிதாக வெடிக்க, பின்னர், நமோ நாராயணனுக்கு எதிராக எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவாராம் சமுத்திரகனி. அந்த வகையில், இதுவரை காமெடி கலந்த வேடங்களில் நடித்து வந்துள்ள நமோ நாராயணன் இந்த படத்தில் அதிரடியான அரசியல் வில்லனாக உருவெடுத்துள்ளாராம்.