100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛புரூஸ் லீ'. ஜிவி பிரகாஷ் ஜோடியாக புதுமுகம் கிர்த்தி கர்பந்தா நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். தற்போது ‛புரூஸ் லீ' மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நடை, உடை, பாவணை என அனைத்து தமன்னாவை நியாகப்படுத்துகிறது. புரூஸ் லீ படம் பொங்கல் விருந்தாக வருகிற ஜன., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது. கிருத்தி கார்பந்தா நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில், தான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛என் குடும்பத்தில் யாரும் சினிமாவோடு தொடர்பு உடையவர்கள் கிடையாது. நான் தான் முதன்முதலாக சினிமாவிற்கு வந்துள்ளேன். ஏற்கனவே கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளேன். இதனால் கொஞ்சம் கொஞ்சம் அந்தந்த மொழிகளில் பேசுவேன். தமிழில் இது தான் எனக்கு முதல்படம். ஆகையால் இப்போது தான் தமிழ் கற்று வருகிறேன், விரைவில் தமிழில் பேசுவேன். எனக்கு தமிழில் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை. சூர்யாவுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று துடிக்கிறேன். நான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வேன். ஓய்வு நேரங்களில் எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும், தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிப்பேன்'' என்றார்.