ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

தனது படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுபவர் என பெயர் வாங்கியவர் நடிகர் அமீர் கான். தற்போது அவர் நடித்துள்ள தங்கல் படத்திற்காக 30 கிலோவிற்கும் மேல் உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடித்துள்ளார். ஒரே படத்தில் 97 கிலோ வரை உடல் எடையை கூட்டியும் குறைத்ததும் பற்றி, சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமீர் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் 97 வரை எடையை கூட்டியதும் இது தான் எனது கடைசி படமாக இருக்கும் என எனது நண்பர்கள் கூறினர். இதற்கு பிறகு என்னால் உடல் எடையை குறைக்கவோ, கட்டுக்கோப்பாக மீண்டும் மாறவோ முடியாது என்றனர். தங்கள் எனது கடைசி படமாக இருக்க போகிறது என வருத்தப்பட்டனர். இதை நேரடியாக என்னிடம் அவர்கள் கூறவில்லை. அவர்கள் என்னுடன் பேசும் போது அவர்கள் கண்களிலேயே இது தெரிந்தது. மீண்டும் எடையை குறைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. சில சமயங்களில் நான் எனது நம்பிக்கையை இழந்து விட்டேன் என்றார். டைரக்டர் நிதேஷ் திவாரி இயக்கி உள்ள தங்கல் படம் இந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ரிலீசாக உள்ளது.