'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார்.
அம்மணி நடிப்பை சில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.