100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
கருப்பு வெள்ளை காலத்திலேயே தனது கவர்ச்சியால் உலக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் மர்லின் மன்றோ. சினிமா உலகின் முதல் கனவு கன்னி அவர்தான். அவரது மாடலிங் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக வேகமாக அடிக்கும் காற்றில் தனது கவுன் பறக்க... அவர் வெட்கத்துடன் கவுனை பிடிக்கும் போஸ் உலக புகழ் பெற்றது. அதன் பிறகு இந்த போஸை பல நடிகைகள், பல படங்களில் காப்பி அடித்தார்கள். தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா இந்த போஸ் கொடுத்தார்.
இப்போது சிவகார்த்திகேயன் ரெமோ படத்திற்காக மர்லின் மன்றோவாக மாறி போஸ் கொடுத்திருக்கிறார். ரெமோ படத்தில் அழகான நர்சாக பெண் வேடமிட்டு நடிக்கும் சிவகார்த்திகேயனின் இந்த போஸ் வைரலாகியிருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் காட்சியா அல்லது புரமோசனுக்கான ஸ்பெஷலாக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியவில்லை. என்றாலும் மர்லின் மன்றோ போஸ் கொடுத்த முதல் ஆண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.