குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் இன்னொரு ஹீரோ போன்ற வேடங்களில் நடித்து இப்போது தானும் ஹீரோவாகி விட்டவர் கலையரசன். அதற்கு முன்பு சற்று நெகடீவ் கலந்த காரசாரமான கதாபாத்திரங்களில் நடித்த வர் இப்போது ஹீரோவாகி விட்டதால் பாசிட்டீவான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும், ராஜாமந்திரி படத்தில் ஓரளவு காமெடி கலந்த காட்சிகளிலும் நடித்தபோதும் அது பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை என்பதால் இப்போது சீரியஸ் கதைகள் பக்கம் திரும்பியுள்ளார் கலையரசன்.
அந்த வகையில், கபாலிக்குப்பிறகு அவர் நடித்து வரும் அரை டஜன் படங்களில் ஓரளவு சீரியசான கதைகளாக அமைந்துள்ளதாம். அதில் பட்டினப்பாக்கம் படத்தில் முழு சீரியஸ் கதையில் நடித்துள்ளார் கலையரசன். கதைப்படி செய்யாத கொலையில் அவர் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரமாம். அந்த கொலையை தான் செய்யவில்லை என்பதை நிரூபிக்க அவர் சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்த படமாம். அந்த வகையில், இந்த பட்டினப்பாக்கம் படம் தனது மார்க்கெட் டில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார் கலையரசன்.