குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கபாலி படம் வெளிவந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் அந்தப் படம் பற்றிய பேச்சு திரையுலகத்திலும், ரசிகர்களிடத்திலும் இன்னமும் ஓடிக் கொண்டுதானிருக்கிறது. ரஜினிகாந்த் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பது மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆச்சரியத்தை முதலில் வெளிப்படுத்தியிருப்பவர் தெலுங்குத் திரையுலகத்தின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
கபாலி படம் பற்றி கேள்விப்பட்டதும் படத்தைப் பார்க்க வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். உடனே அவருக்கு ஹைதராபாத்தில் சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். படம் பார்த்து நெகிழ்ச்சியடைந்த சிரஞ்சீவி, மீண்டும் சில நாட்கள் கழித்து படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். படம் பார்த்துட்டு வீட்டுக்குப் போனேன். படம் என்னை என்னமோ பண்ணுது. ரஜினியை இப்படி ஒரு கதாபாத்திரத்துல பார்க்கிறது ஆச்சரியமா இருக்கு. அதுவும் 25 வருஷம் பிரிஞ்சிருந்த மனைவியைப் பார்க்கும் போது அவர் காட்டிய நடிப்பு அப்படியே கண்ணுல நிக்குது. திரும்பவும் நான் படம் பார்க்கணும்,” எனக் கேட்டிருக்கிறார்.
ரஜினிகாந்தும் சிரஞ்சீயும் திரைப்பட நடிகர்களாக வருவதற்கு முன்பே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். இருவரும் சென்னையில் பிலிம் சேம்பரில் அந்தக் காலத்தில் இருந்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தவர்கள் என்பது கூடுதல் தகவல். ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் சிரஞ்சீவிதான் வில்லன். ரஜினிகாந்த் நடித்து சூப்பர்ஹிட்டான மாப்பிள்ளை படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவிதான் என்பது இன்னுமொரு கூடுதல் தகவல்.