'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
திருநின்றவூரில் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் கட்டியுள்ள எம்.ஜி.ஆர்., கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று(15.08.11) நடந்தது. "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்., திரையுலகில் மட்டுமல்லாது, ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களால் மக்கள் மனதில் நிரந்தர, "ஹீரோவாக என்றும் வாழும் எம்.ஜி.ஆருக்கு, ரசிகர்கள், கட்சித்தொண்டர்கள் என்ற எல்லையைத் தாண்டி, ஏராளமானவர்கள் பக்தர்களாக மாறி அவர் புகழ்பாடி வருகின்றனர்.
சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன், 50. எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான இவர், எம்.ஜி.ஆருக்கு திருநின்றவூர், நத்தமேடு, செல்லியம்மன் சாலையில், "எம்.ஜி.ஆர்., ஆலயம் என்னும் பெயரில் கோவில் கட்டியுள்ளார். இக்கோவிலின், கும்பாபிஷேகம் நேற்று காலை 9.15 மணிக்கு நடைபெற்றது. வழக்கமான கோவில் கும்பாபிஷேத்தை போலவே, கடந்த இரண்டு நாட்களாக மோகன் சிவாச்சாரியார் மற்றும் ஆழ்வை ராஜப்பாசாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் கோவில் வளாகத்தில் நடந்தன.
கும்பாபிஷேகத்தின் போது கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினார். அப்போது, திரளாக குழுமியிருந்த பக்தர்கள், "எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே என்று கோஷமிட்டனர். மேலும், இரண்டு அடி உயரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., உற்சவர் சிலைக்கு பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகத்தில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் விஜயனின் மனைவி சுதாவிஜயன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் பேரன் பிரதீப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கும்பாபிஷேக விழாவில் சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர்., பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு பங்கேற்றனர்.