விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

அஜீத்தின் என்னை அறிந்தால், ஆர்யாவின் மீகாமன், விஜய்யின் தெறி, விஜய சேதுபதியின் நானும் ரவுடிதான், விஷாலின் கதகளி என பல படங்களில் வில்ல னாக நடித்தவர் ஆத்மா. சில புதிய படங்களில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும், இவரை மாயாபவனம் -என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்டபோது, நாயகனாகி விட்டால் வில்லன் வாய்ப்புகள் வராதே என்று தயங்கி வந்தார். அதையடுத்து, அவரிடம் பேசி சமாதானம் செய்து மாயா பவனம் படத்தில் நாயகனாக நடிக்க வைத்து விட்டனர். தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
வில்லனில் இருந்து நாயகனானது பற்றி ஆத்மாவைக் கேட்டபோது, சினிமாவில் நான் வில்லனாகத்தான் ரசிகர்களுக்கு பரிட்சயம். அதனால் அதே ரூட்டை தொடரவே ஆசைப்பட்டேன். ஆனால் மாயாபவனம் படத்தில் ஹீரோ வேடம் என்றாலும் அதில் ஓரளவு நெகடீவும் கலந்து இருந்தது. அதனால் இரண்டுவிதமான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்று நடித்தேன். இந்த படம் ஹாரர் கதை யில் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதால் தொடர்ந்து அப்படித்தான் நடிப்பேன் என்றில்லை. வழக்கம்போல் வில்லன் வேடங்களையே வரவேற்கிறேன் என்கிறார் ஆத்மா.