தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
ஜெமினி திரைப்படத்தில் "ஓ" போட்ட விக்ரம், இப்போது "பி" போட சொல்லி பிரச்சாரம் பண்ணும் ரகசியம் இதுதான்! அதாகப்பட்டது, உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி சென்னை, மியாட் மருத்துவமனையில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானபேருக்கும், இலவச "ஹெபடைட்டிஸ்-பி" எனும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்பட்டது. கூடவே லிவ்பார்லைப் எனும் "ஹெபடைட்டிஸ் - பி" தொற்று நோய்க்கு எதிரான மஞ்சள் ரிப்பன் பிரச்சாரத்தையும், இந்த தடுப்பூசி போடும் வைபவத்தையும் தொடங்கி வைக்க வருகை தந்திருந்தார் நடிகர் விகரம்.
அப்போது பேசிய நடிகர் விக்ரம், மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ் அவர்களால் தான், இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். அவர்தான் எனது ஃபேமிலி டாக்டர். ஒரு விபத்தில் பாதிப்பிற்கு உள்ளானபோது, என்னை காபாற்றி மறுபிறவி கொடுக்க வைத்தவர். அவர் அழைத்ததும் இங்கு, இந்த நல்ல காரியத்திற்காக உடனே ஓடி வந்தேன். ஆனால் அவரே என்னை டாக்டர் விக்ரம் என்று அழைப்பதும், பிஸி ஷெட்யூலில் நான் இங்கு வந்திருப்பதாக இங்கு பேசும் போது கூறியதும் எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேநேரம் நான் எந்த பிஸி ஷெட்யூலிலும் இல்லை. டாக்டர் அழைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிவரத்தயார்.
ஜெமினி படத்தில் கமர்ஷியலாக ஓ போடு என்றேன், அது பிரபலமானது. இன்று எனது டாக்டர் கூறுவதை கேட்டு எல்லோரது உயிரையும் காக்க பி (ஹெபடைட்டிஸ் -பி) போடுங்கள் என்கிறேன். அவ்வளவுதான்! என்று பி போடு ரகசியத்தை போட்டுடைத்தார். விழாவில் மியாட் மருத்துவமனை சேர்மன் மல்லிகா மோகன்தாஸ், டாக்டர்கள் அருள்பிரகாஷ், தினேஷ் ஜோதிமணி, ஜார்ஜ் எம்.சண்டி, மனோஜ் குமார் உள்ளிட்ட மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.