100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பாலா இயக்கதில் சசிகுமார் நடித்த தாரைதப்பட்டை படம் தஞ்சாவூரை கதை களமாக கொண்டிருந்தது. அடுத்து அவர் தற்போது நடித்து வரும் படம் வெற்றிவேல். இதுவும் தஞ்சையை களமாக கொண்ட கதை. சுந்தரபாண்டியன், நாடோடிகள் மாதிரியான ஜாலியான பேமிலி எண்டர்டெய்ன்ட்மென்ட் கதை. அவைகள் மதுரை கதை களம் என்றால் இது தஞ்சை கதை களம். வெற்றிவேல் என்கிற பெரியகுடும்பத்து பாசக்கார இளைஞனை சுற்றி நடக்கிறகதை.
பிரபு முதன் முறையாக சசிகுமாருடன் இணைந்து நடித்திருக்கிறார். மியா ஜார்ஜ், நிகிலா விமல், வர்ஷா என மூன்று ஹீரோயின்கள். மூவருமே அத்தை மகன் சசிகுமாரை வளைத்துப்போட நினைக்கிறவர்கள். சசிகுமார் யாரிடம் மயங்குகிறார் என்பது லவ் எபிசோட். தம்பி ராமய்யா, இளவரசு, ரேணுகா, விஜி நடித்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சினையால் சூரி மட்டும் மிஸ்சிங். விநியோகஸ்தர் ரவீந்திரன் தயாரிக்கிறார். சசிகுமாரின் உதவியாளர் வசந்தமணி இயக்குகிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை அமைத்துள்ளார். 40 நாளில் படத்தை எடுத்து முடித்து விட்டார்கள்.