நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சக்தி ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் 'நுண்ணுர்வு'. இதில் மதிவாணன் சக்திவேல், என்ற புதுமுகம் இயக்கி நடித்துள்ளார். தயாரிப்பாளரும் அவர் தான். இந்திரா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மயூ கணேசன் இசை அமைத்துள்ளார், படத்தை பற்றி மதிவாணன் சக்திவேல் கூறியதாவது...
பல் மருத்துவம் படிக்க தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் ஒரு இளைஞனுக்கு அங்கு இனம்புரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதனால் ஆட்கொள்ளப்படும் அவனால் பல பிரச்னைகள் உருவாகிறது. அந்த உணர்வு என்ன அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அதிலிருந்து அவன் வெளியில் வந்தானா என்பதுதான் கதை. காதல் கலந்த அறிவியல் கற்பனை கதை. நான் ஏற்கெனவே மகா மகா என்ற படத்தை இயக்கி அதற்காக பல விருதுகளை பெற்றுள்ளேன். இந்த படம் முழுவதும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் நடித்திருக்கிறார்கள்.