Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது பரபரப்பு புகார்!

02 ஜூன், 2011 - 09:42 IST
எழுத்தின் அளவு:

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறுப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். 4 பக்க புகார் மனுவில் சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயலட்சுமி, அதில் நானும், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில்,  நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.

Advertisement
கருத்துகள் (66) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - பாண்டியன்மறக்க முடியுமா? - பாண்டியன் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (66)

vinoth kumar - theni, kombai,இந்தியா
04 ஜூன், 2011 - 07:54 Report Abuse
 vinoth kumar first analyse the problem both side then the judgment is given who is right or wrong. the cinema artists are rap the culture.
Rate this:
dhanabalan - singapore,இந்தியா
04 ஜூன், 2011 - 07:51 Report Abuse
 dhanabalan தமிழன் வளர்ச்சி யாருக்கு புடிக்கும் அதனாலதான் இவள்க மாட்டி விட பார்கிராலுக....சரி விடு அண்ணே....பாப்போம்..
Rate this:
கே.சதன் - luzern,சுவிட்சர்லாந்து
04 ஜூன், 2011 - 02:18 Report Abuse
 கே.சதன் இருண்ட தமிழ் இனத்துக்கு எரியும் சூரியன் சீமான். இந்த சோதனையில் இருந்து பல மயில் பாய்வார். இது இன்னும் உயரவே .
Rate this:
GOWSALYA - Denhelder,நெதர்லாந்து
04 ஜூன், 2011 - 01:55 Report Abuse
GOWSALYA எப்போதும் நல்லவர்களுக்கு சோதனை அதிகம்.அதேபோலத் தான்,சீமான் அவர்களுக்கும்.வியசம் லச்சுமி எவ்வளவு பணம் இதுக்கு வாங்கினாங்கோ..ஒ..ஒ...????
Rate this:
krishnan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஜூன், 2011 - 23:44 Report Abuse
 krishnan ஈழ தமிழ் பெண்ணை மணப்பது சரியான முடிவு. இதில் சீமான் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கட்டும்
Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in