சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டதும் அஜித் ரசிகர்களே சற்று அதிர்ச்சியடைந்தனர். தலைப்பைப் பார்த்தால் நம்ம தல நடிக்கிறது பேய்ப்படம் மாதிரி இருக்கே... கலக்கமும் அடைந்தனர். வேதாளம் பேய்ப்படம் இல்லை என்றும்... ப்ளாஷ்பேக்கில் வரும் மொட்டைத்தலை அஜித்தின் பெயர் வேதாளம் என்பதால் படத்துக்கும் அந்தப்பெயரே வைக்கப்பட்டது என்று தெரிந்ததும் சற்றே நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் புலி படத்தில் வேதாளம்தான் வில்லன். படம் முழுக்க வேதாளத்துக்கு எதிராக வசனங்கள் வேறு. வேதாளம் படத்தின் நாயகியான ஸ்ருதிஹாசன்தான் புலி படத்தின் நாயகியும். புலி படத்தில் வேதாளம் என்ற விஷயம் இருப்பதை முன்கூட்டியே வேதாளம் பட இயக்குநர் அல்லது தயாரிப்பாளரிடம் சொல்லி இருந்தால் அஜித் படத்துக்கு வேதாளம் என்ற தலைப்பை வைத்திருக்க மாட்டார்கள்.
இந்த விஷயத்தை ஸ்ருதிஹாசன் ஏன் சொல்லவில்லையாம்? இது பற்றி ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது, புலி படத்தில் வேதாளம் என்ற விஷயம் இருப்பதும், வேதாள தேசம் என்று இருப்பதும், விஜய்யே வேதாளமாக நடிக்கிறார் என்பதும் எனக்கு தெரியும். இதை எல்லாம் நான் எதற்காக அஜித் படம் சம்மந்தப்பட்டவர்களிடம் போய் சொல்ல வேண்டும்? அது என் வேலையில்லை. என்று கட் அண்ட் ரைட்டாக பதில் சொல்லி இருக்கிறார்.