சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழில் 2006ம் ஆண்டு வெளிவந்த 'கேடி' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தமன்னா. அந்தப் படம் வெற்றி பெறாததால் தமன்னா யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. அடுத்து எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக 'வியாபாரி' படத்திலும் நடித்தார், அப்போதும் கவனிக்கப்படவில்லை. ஆனால், மூன்றாவதாக நடித்த 'கல்லூரி' படத்தில்தான் அனைவராலும் கவனிக்கப்பட்டர். விமர்சன ரீதியாக தமன்னாவின் நடிப்பும், படமும் அதிகம் பாராட்டப்பட்டதால் தமிழில் தொடர்ந்து தமன்னாவுக்கு வெற்றிப் படங்களாகவே அமைந்தது. “படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சிறுத்தை” என சில வெற்றிப் படங்களில் நடித்தார். 2011ம் ஆண்டில் 'வேங்கை' படத்தில் நடித்த பிறகு திடீரென்று காணாமல் போய்விட்டார்.
அதன் பின் 2014ம் ஆண்டில் அஜித் ஜோடியாக 'வீரம்' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார். சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து சமீபத்தில் வெளிவந்த 'பாகுபலி' படமும் தமன்னாவைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அடுத்த மாதம் வெளிவர உள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்திலும் தமன்னா அதிகம் பேசப்படுவார் என படத்தின் இயக்குனர் ராஜேஷ் சொல்கிறார். சந்தானத்தையே கலாய்க்கும் ஒரு கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருக்கிறாராம். படத்தின் டிரைலரும், பாடல்களும் அவர் சொல்வதை உறுதி செய்கின்றன. இந்தப் படத்தை அடுத்து கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் 'பாகுபலி' இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். 'பாகுபலி' ஹிந்தியிலும் வெற்றி பெற்றுள்ளதால் பாலிவுட்டிலும் கவனிக்கப்பட்டுள்ளாராம். தமிழில் 3 வருடங்களாக விட்ட இடத்தையும், பாலிவுட்டில் கிடைத்த தோல்வியால் இழந்த இடத்தையும் தமன்னா விரைவில் பிடித்து விடுவார் போலத் தெரிகிறது.