சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுட்டில் பாகுபலி படத்தையே நம்பியிருந்த நடிகை தமன்னாவிற்கு அப்படம் வெற்றியை தேடி தந்தது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்த தமன்னாவிற்கு, சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வந்தது. பாகுபலி படம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்து தரும் என தமன்னா நம்பிக்கொண்டிருந்தார். பாகுபலி படத்தில் இளவரசியாக ரசிகர்களை கவர்ந்த தமன்னாவிற்கு அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. கார்த்திக்குடன் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நாயகியாக நடித்து வரும் தமன்னாவிற்கு, டோலிவுட் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட அழைப்பு வந்துள்ளதாம். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குகின்றார். இப்படத்தில் வரும் குத்தாட்ட பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆருடன் நடனமாட தமன்னாவிடம் சுகுமார் கேட்டுள்ளார். தமன்னா ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடனமாடுவது உறுதி செய்யப்பட்ட பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.