சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஆகிய இருவரையும் சினிமாவில் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்காதபோதும், சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு சினிமா நுட்பங்களை அவ்வப்போது சொல்லிக்கொடுத்து தான் வளர்த்திருக்கிறார் கமல். அதனால்தான் எதிர்பாராதவிதமாக நடிகையானபோது அவர்கள் எளிதில் நடிப்பை பற்றிக்கொண்டார்கள்.
அந்த வகையில், ஸ்ருதிஹாசன், இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். என்றாலும், தமிழ்ப்படங்களில் நடிக்க சென்னை வரும்போது அப்பா கமலை சந்திக்கிறார்.
அப்படி அவர் வரும்போது ஏதாவது படங்களுக்காக கமல் நடன பயிற்சிகளில் ஈடுபட்டால் தானும் அதில் கலந்து கொள்கிறாராம் ஸ்ருதி. மேலும், சின்ன வயதில் இருந்தே கமலுடன் நடன பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த ஸ்ருதி. இப்போது அவருக்கு இணையாக நடனமாடும் அளவுக்கு தேறியிருப்பதால், அன்றைய பயிற்சிக்கு வரவேண்டிய கதாநாயகி வரவில்லையென்றால் அவர் இடத்தில் நின்று தானே நடனமாடுகிறாராம் அவர்.