மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா |
சினிமாவில் கிரேன் டெக்னீஷியனாக இருந்தவர் மனோகர். பின்னர் காமெடி நடிகரானபோது கிரேன் மனோகர் என்று தனது பெயரை வைத்துக்கொண்டார். இவருக்கு கே.எஸ்.ரவிக்குமார்தான் தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வந்தார். அதனால் குறுகிய காலத்தில் பேசப்படும் நடிகராக வளர்ந்து வந்தார் கிரேன் மனோகர். ஆனபோதும், அவரது அபிமானத்திற்குரிய கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட சில பிரபல டைரக்டர்கள் சமீபகால படங்கள் இயக்குவது குறைந்து விட்டதால் கிரேன் மனோகருக்கான படவாய்ப்புகளும் குறைந்து விட்டன. அதனால் அவ்வப்போது ஓரிரு படங்களில்தான் அவர் நடித்து வருகிறார்.