உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

30 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருப்பவர் வேலு பிரபாகரன், நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், காதல் அரங்கம் என பரபரப்பான படங்களை இயக்கியவர். "சில்க் ஸ்மிதாவின் காதலன் நான்" என்று அடிக்கடி பேட்டி தட்டிவிடுவார். காதல் அரங்கம் படத்தில் ஒரு நடிகையை நிர்வாணமாக நடிக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நண்பனின் மனைவி என் காதலி என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வந்தார். அதன் பிறகு வேலு பிரபாகரனின் காதல் கதை, என்று ஒரு படத்தை தொடங்கினார். கலைஞனின் காதல் என்ற படம் எடுத்தார். தற்போது ஒரு வழியாக காதல் டைரி என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இது வேலு பிரபாகரனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து பின்னப்பட்ட கதையாம். அவரே நடித்தும் இருக்கிறார். சுவாதிஸா என்பவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இளையராஜா இசை அமைத்திருக்கிறார். ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கொடைக்கானல், கஜிராஹோ, ஜெய்ப்பூர், ஆகிய இடங்களில் படமாகி உள்ளது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.