விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாளத் திரையுலகில் ஏன் வேறு எந்தத் திரையுலகிலாவது ஒரு நடிகரின் படங்கள் இந்த அளவிற்கு மற்ற மொழிகளில் ரீமேக் ஆகியிருக்குமா என்பது சந்தேகம்தான். மோகன்லால் இதுவரை மலையாளத்தில் நடித்துள்ள படங்களில் அவருடைய 55 படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாம். இதில் அதிகபட்சமாக தமிழில் மட்டும் 20 படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கில் 13, ஹிந்தியில் 11, கன்னடத்தில் 9 படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாம். 1985ம் ஆண்டு 'பூவே பூச்சூடவா' படத்தில் ஆரம்பித்த மோகன்லால் நடித்த படங்களின் தமிழ் ரீமேக், 2015ல் 'பாபநாசம்' வரையிலும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழில் ஏறக்குறைய முக்கிய நடிகர்கள் அனைவருமே மோகன்லால் படத்தை ரீமேக் செய்துள்ளார்கள். அந்தப் பட்டியல் இதோ...தமிழ் ரீமேக் படங்களும், அவை வெளிவந்த ஆண்டும், அடைப்புக் குறிக்குள் மலையாளப் படங்களும் அவை வெளிவந்த ஆண்டும்...
பூவே பூச்சூடவா - 1985 (நோக்கெத தூரத்து கண்ணும் நட்டு - 1984)
இல்லம் - 1988 (சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் - 1986)
மக்கள் என் பக்கம் - 1987 (ராஜாவின்டே மகன் - 1986)
மனசுக்குள் மத்தாப்பூ - 1988 ( தலவட்டம் - 1986)
அண்ணா நகர் முதல் தெரு - 1988 (காந்தி நகர் 2வது தெரு - 1986)
கதாநாயகன் - 1988 (நாடோடிக்காட்டு - 1987)
எங்கிருந்தோ வந்தான் - 1995 (சித்ரம் - 1988)
திராவிடன் - 1989 (ஆர்யன் - 1988)
கிரீடம் - 2007 (கிரீடம் - 1989)
சீனு - 1999 (பரதம் 1991)
தலைநகரம் - 2006 (அபிமானி - 1991)
வியட்நாம் காலனி - 1994 (வியட்நாம் காலனி - 1992)
சந்திரமுகி - 2005 (மணிச்சித்திரத்தாழ் - 1993)
முத்து - 1995 (தேன்மாவின் கொம்பத் - 1994)
அழகான நாட்கள் - 2001 (மின்னாரம் - 1994)
வீராப்பு - 2007 (ஸ்படிகம் - 1995)
சும்மா நச்சுனு இருக்கு - 2013 (சந்திரலேகா - 1997)
லேசா லேசா - 2003 ( சம்மர் இன் பெத்லஹேம் - 1998)
லண்டன் - 2005 (காக்கா குயில் - 2001 )
வெள்ளி திரை - 2008 ( உதயநானு தாரம் - 2005)
பாபநாசம் - 2015 (த்ரிஷ்யம் - 2013)