பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
நீண்ட நாட்களாக அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கிருஷ்ணாவுக்கு ஆசை இருந்து வந்தது. இப்போது யட்சன் படத்தில் அது நிறைவேறி உள்ளது. ஆர்யா தம்பியாக கிருஷ்ணா நடிக்கிறார். உண்மையில் அண்ணன் - தம்பி பற்றிய கதைதான் இது. விஷ்ணுவர்தன் தன்னுடைய சொந்தவாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி கதை அமைத்திருக்கிறார். இது பற்றி விஷ்ணு கூறியதாவது. ஆர்யாவுடன் அதிக படங்கள் செய்திருக்கிறேன். எல்லாத்தையும் விட யட்சன் வித்தியாசமான படமாக அமையும். என்னோட முதல் படத்திலேயே கிருஷ்ணாவை நடிக்க வைத்திருக்க முடியும். அப்படி செய்ய மனம் வரவில்லை காரணம் இண்டஸ்ட்ரி பற்றி அவன் தெரிந்து கொள்ளவேண்டும். தன்காலில் நிற்கும் நம்பிக்கை அவனுக்கு அவனே உருவாக்கி கொள்ள வேண்டும் என்று விட்டு விட்டேன். இப்போது கிருஷ்ணா சுய காலில் நிற்கிறார். எனக்கு ஒரு நடிகனாக என்னால் பார்க்க முடிகிறது. எனக்கு ஒரு நடிகர் தேவைப்பட்டபோது தம்பியாக பார்க்கவில்லை நடிகனாக பார்த்தேன். நடித்திருக்கிறார். சிறப்பாக வந்திருக்கிறது என்றார் விஷ்ணுவர்தன்.