சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மணிரத்னம் இயக்கி துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' யாருக்கு திருப்புமுனையைத் தந்ததோ இல்லையோ, மணிரத்னத்திற்கு நல்ல திருப்புமுனையைக் கொடுத்துள்ளது. வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்திற்கு பல்வேறு திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். பல இயக்குனர்கள், அமிதாப் பச்சன் உட்பட பலரும் படத்தைப் பார்த்து விட்டு மணிரத்னத்தையும், துல்கர், நித்யாவையும் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்தும் இணைந்துள்ளார். சமீபத்தில் ரஜினிக்கு இப்படம் பிரத்தியேகமாக திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த ரஜினி, மணிரத்னத்தை அவருடைய ஸ்டைலில் வியந்து பாராட்டினார் என்று சம்பந்தப்பட்டர்கள் சொல்கிறார்கள்.
'ஓ காதல் கண்மணி' படம் தோல்வியில் துவண்டிருந்த சிலருக்கு வெற்றியைக் காட்டியிருக்கிறது. மணிரத்னம் இந்தப் படத்திற்கு முன் இயக்கிய சில படங்கள் தோல்விப் படங்கள்தான். ஏ.ஆர்.ரகுமான் இதற்கு முன் இசையமைத்த 'காவியத் தலைவன், லிங்கா, ஐ' ஆகிய படங்களின் பாடல்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. ஆனால், 'ஓ காதல் கண்மணி' படத்தின் பாடல்கள் ரகுமானை ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேச வைத்துள்ளன. துல்கர் நடித்த முதல் தமிழ்ப் படமான 'வாயை மூடிப் பேசவும்' தோல்விப் படம்தான். நித்யா மேனன் தமிழில் இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்கள்தான். இப்படி தோல்வியில் துவண்டவர்களை நன்றாகவே நிமிரச் செய்துள்ளது 'ஓ காதல் கண்மணி'.