'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான நித்யா மேனனின் நடிப்பில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஒ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஓகே கண்மணி படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டலும், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழும் கதை களத்தில் படம் நகர்வதால் சில எதிர்ப்புகளையும் இப்படம் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் படத்தின் நாயகி நித்யா மேனன் இது குறித்து கூறுகையில், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழ்வது என்பது அவ்வாறு வாழும் தம்பதியர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ள ஓகே கண்மணி படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகன் துல்கர் சல்மானுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.