ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் |
தனது பிறந்தநாளை டுவிட்டரில் இணைந்து வெகு விமர்சையாகக் கொண்டாடிய தெலுங்கு திரையின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூனின் நடிப்பில் S/O சத்தியமூர்த்தி படம் திரைக்கு இன்று வந்துள்ளது. அல்லு அர்ஜூன் இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு திரை விருந்து படைக்கவுள்ளார். இப்படம் உலகமுழுவதும் 1400 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக சென்னையில் மட்டும் 60 திரையரங்குகளில் இப்படம் திரைக்கு வந்துள்ளதாக தெரிகின்றது. வேறு எந்த தெலுங்கு படங்களுக்கும் இல்லாத அளவில் இப்படம் தமிழ் திரையிலும் வரவேற்பு பெற்றுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன. இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.