அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி |
காஜல்அகர்வால், தமன்னா, ஹன்சிகாவைப்போன்று மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்தவர்தான் பூனம் பாஜ்வா. ஆனால் மற்றவர்களெல்லாம் இந்தி படங்களில் நடித்தவர்கள். ஆனால் இவரோ இதுவரை ஒரு இந்தி படத்தில்கூட நடித்ததில்லை. தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் தமிழ், கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய நடிகையாகி விட்டார்.
அந்தவகையில், தமிழில் பரத், ஜீவா, விஷால் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தவர் இப்போது ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயினி என்றாலும், பூனம்பாஜ்வாவுக்கு ஒரு வித்தியாசமான வேடமாம். கதாநாயகி என்றும் சொல்ல முடியாது.அதேசமயம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்றும் முடிவு செய்து விட முடியாத அளவுக்கு ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.
இதுபற்றி ஜெயம்ரவி கூறும்போது, இந்த ரோமியோ ஜூலியட் படத்தில் இரண்டு அழகான கதாநாயகிகள் இருந்தபோதும், அந்த அழகை மீறி படத்தில் அவர்களது தனித்திறமையே வெளிப்பட்டிருக்கிறது. இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் இருந்ததால் அவர்களுக்கிடையே போட்டி இருந்ததோ என்னவோ பர்பாமென்ஸில் பின்னி எடுத்து விட்டார்கள்.
அதிலும், பூனம்பாஜ்வா, இயல்பாக நடித்திருந்தார். தமிழில் முதல் ரவுண்டு அவருக்கு எதிர்பார்த்தபடி இல்லையென்றாலும் இந்த ரவுண்டு பெரிய அளவில் இருக்கும். அதற்கு இந்த படமே சாட்சி. அதோடு, அவர் எப்படி இயல்பான நடிகையோ அதேமாதிரி தான்அனைவரிடமும் இயல்பாக பழகுவார். போலித்தனம் என்பதே அவரிடம் இருக்காது. நான் இப்படி இந்தமாதிரிதான் என்றால் அப்படியேத்தான் கடைசி வரைக்கும் இருப்பார். அந்த வகையில் அவர் ஒரு ரியலான நடிகை என்கிறார் ஜெயம்ரவி.