விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் |

லிங்கா' திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று (11.03.2015) சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எம்.அண்ணாமலை, ரோகிணி பன்னீர் செல்வம், சீனு (திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்), எஸ்.தாணு, டி.சிவா (தயாரிப்பாளர் சங்கம்) மற்றும் லிங்கா பட தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
“ராக்லைன் வெங்கடேஷ் 10 கோடி கொடுக்க சம்மதித்துள்ளார், பாக்கி 10 கோடியை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க 'உத்தம வில்லன்' படத்திற்கு தடை போடுங்கள். ஈராஸ் நிறுவனம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடமிருநது அந்த பணத்தை வாங்கி விடலாம்” என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடம் யோசனை கூறியிருக்கிறார்.
“இந்த கூட்டம் 'லிங்கா' பட நஷ்ட ஈடு சம்பந்தமாக பேசுவதற்குத்தான், உத்தம வில்லன் படத்திற்கு 'ரெட்' போட அல்ல. எட்டு கோடி நஷ்டத்தை நாங்கள் ஏற்கத் தயார். ராக்லைன் வெங்கடேஷ் கொடுக்க சம்மதித்துள்ள 10 கோடி ரூபாயை முதலில் வாங்கித் தாருங்கள்” என்று கூறியுள்ளனர் லிங்கா பட விநியோகஸ்தர். “நாங்கள் கூறுவதையே, நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும்,” என்ற தாணு, 'உத்தம வில்லன்' படத்திற்கு ரெட் போட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார்.
“ 'லிங்கா' பட பஞ்சாயத்தை வைத்து கமல் படத்துக்குத் தடை போடுவதை எங்களால் ஏற்க முடியாது எனக் கூறி விட்டு லிங்கா பட விநியோகஸ்தர்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு வெளியேறிவிட்டனராம்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட லிங்கா படவிநியோகஸ்தர்களிடம் கேட்டபோது, ''லிங்கா' பட நஷ்ட ஈட்டை வாங்கித் தருவதைப்பற்றி பேசாமல் 'உத்தம வில்லன்' படத்திற்கு தடை போடுவதைப் பற்றியே தாணு பேசினார். அத்துடன் எங்கள் தரப்பு நியாயத்தையோ, நாங்கள் பேசுவதையோ, தாணு கேட்கத் தயாராக இல்லை. முதலீடு செய்து நஷ்டமடைந்திருக்கும் எங்கள் உணர்வுகளுக்கு மரியாதை இல்லை. அதனால் கூட்டத்தை விட்டு வெளியேறினோம். 'உத்தம வில்லன்' படத்திற்கு எதிரான தாணுவின் இந்த நடவடிக்கை கமல்ஹாசன் மீதான அவருடைய தனிப்பட்ட விரோதத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.” என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் திரைப்படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு வந்த பின் பாரபட்சமின்றி செயல்படுதே ஒரு நல்ல தலைமைக்கு அழகு. தனிப்பட்ட விரோதங்களையும், தனிப்பட்ட பழியைத் தீர்த்துக் கொள்வதற்கும் தலைவர் பதவியை பயன்படுத்துவது தவறு என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.




