சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கமல்ஹாசனின் இரண்டு மகள்களும் நடிக்க வந்துவிட்டார்கள். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் '7ம் அறிவு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இளைய மகள் அக்ஷரா ஹாசன் நாயகியாக அறிமுகமாகும் 'ஷமிதாப்' ஹிந்திப் படம் நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் திரையுலக அறிவும், அனுபவமும், ஆர்வமும் அனைவரும் அறிந்ததே. ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகராக, பின்னணிப் பாடகராக, நடனத்திலும் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பவர்தான் கமல்ஹாசன். திரையுலகத்தினர் கூட அவரை ஒரு பல்கலைக்கழகம் என்றுதான் குறிப்பிடுவார்கள்.
அதே போலவே தன்னுடைய மகள்களுக்கும் திரைப்படங்களில் நடிப்பதையும் மீறி பல விஷயங்களிலும் ஆர்வம் செலுத்தும் அளவிற்கு வளர்த்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், தமிழில் நாயகியாக நடிப்பதற்கு முன்பே அப்பாவின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்திற்கு இசையமைத்திருந்தார். அதோடு ஸ்ருதி சிறந்த பாடகியும் கூட. தமிழிலும், ஹிந்தியிலும் பாடல்களைப் பாடி வருகிறார். இளையராஜா இசையில் 'ஷமிதாப்' படத்தில் கூட ஒரு ஹிட்டான பாடலைப் பாடியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் அவருடைய பிறந்த நாளை ஜனவரி 28ம் தேதியன்று கொண்டாடினார். அந்த பிறந்த நாள் பரிசாக அவருடைய அப்பா ஸ்ருதிக்கு 'ஸ்கிரிப்ட் ரைட்டிங்' சாப்ட்வேரையும், எழுதுவதற்கான பயிற்சி ஒன்றையும் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் கவிதைகள் கூட எழுதுபவர், ஆங்கிலத்தில் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். விரைவில் குறும்படங்களுக்கான கதையை எழுதப்போவதாக ஸ்ருதிஹாசன் சொல்லகிறார். சீக்கிரமே ஸ்ருதிஹாசனை ஒரு இயக்குனராகவும் பார்க்கலாம்.