குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நான் தீவிர அஜீத் ரசிகன் என்பதை சத்தமாக சொல்லிக்கொண்டு வருபவர் சிம்பு. அதோடு, என்னதான் தானும் ஒரு ஹீரோ என்றபோதும், அஜீத் படத்தை தியேட்டருக்கு சென்று பார்ப்பதில்தான் எனது சந்தோசமே. அதனால் அவர் படம் வெளியாகும்போது எந்த வெளியூர்களில் நான் இருந்தாலும், அந்த ஏரியாவிலுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராய் அமர்ந்து சீட்டி அடித்து அவர் நடிப்பை ரசிப்பேன் என்றும் சொல்லிக்கொண்டு வருகிறார் சிம்பு.
மேலும், தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கியிருக்கும் கெளதம்மேனன், முன்னதாக சிம்பு நடித்த சட்டென்று மாறுது வானிலை படத்தைதான் சில நாட்களாக இயக்கினார். ஆனால், அப்போது பார்த்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க அஜீத் கால்சீட் கொடுத்தார். அதைப்பார்த்த சிம்புவும், அப்படியென்றால் அவரை முதலில் இயக்குங்கள். அந்த படத்தை முடிததது நாம் மீண்டும் இணைவோம் என்று கெளதம்மேனனிடம் சொன்னார்.
அப்படிப்பட்ட சிம்பு, அஜீத்தின் மற்ற ரசிகர்களைப்போன்று தானும் என்னை அறிந்தால் படத்தை பார்க்க ஆவலுடன்தான் இருக்கிறார். அதோடு, அஜீத்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற அவரது ஆசை இன்னும் நிறைவேறாமல் இருக்கும் நிலையில, தற்போது என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5-ந்தேதி திரைககு வரும் நிலையில், அந்த படத்தில் தான் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் டிரைலரை வெளியிட சிம்பு எண்ணியுள்ளார். அதனால் அஜீத் படம் வெளியாவது ஒரு மகிழ்ச்சி என்றால், அவர் படத்துடன் தனது படத்தின் டிரைலரும் வெளியாவது சிம்புவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.