விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ராயல் மூன் பிக்சர்ஸ் சார்பில் சி.எம்.கே.பாருக் முகமது மற்றும் எல்.புருஷோத்தமன் இணைந்து தயாரிக்கும் படம் படைசூழ.ஏ.எஸ்.பிரபு இயக்கும் இப்படத்தில் கணேஷ் பிராசாத் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வர்ஷினி நடிக்கிறார். கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு ரவுடிக்கும் இடையே ஏற்படும் மோதல்தான் படை சூழ படத்தின் மொத்தக்கதையும். இதில் தாதாவாக நடிகர் பிரகாஷ்ராஜின் தம்பி பிரசாத்ராஜ் நடிக்கிறார். அண்ணனைப் போல, தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகும் பிரசாத்ராஜ், உருவத்தில் அண்ணனின் சாயலை கொண்டவராக இருந்தாலும், நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை இந்த படத்தில் பின்பற்றியிருக்கிறாராம்.