ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை |
நடிகர் திலகம் சிவாஜி நடித்த படங்களை வரிசைப்படுத்தினால் டாப் டென்னுக்குள் எளிதாக நுழைந்து விடும் படம் புதிய பறவை. சிவாஜி புரொக்டஷன் பேனரில் சிவாஜி தயாரித்த முதல் படம். தமிழக மக்களை கட்டிப்போட்ட முதல் க்ரைம் த்ரில்லர் படம். சிவாஜியின் ஸ்டைலான படங்களில் புதிய பறவையும் ஒன்று.
கதை
பெரும் தொழிலதிபர் சிவாஜி (கோபால்). தான் அதிகமாக நேசித்த தாய் இறந்த துக்கம் தாளாமல் சிங்கப்பூரில் தண்ணியும், தம்முமாக நிம்மதியின்றி தவிக்கிறார். அப்போது அவர் கிளப் பாடகி சவுகார் ஜானகியை (சித்ரா) சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கும் சிவாஜி அவளை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் சவுகார் ஜானகி நாகரீக மோகத்தில் திளைப்பவர் எப்போதும் மதுஅருந்திக் கொண்டிருப்பவர். இதனால் மனம் நொந்து சிவாஜியின் அப்பா இறந்து விட... சிவாஜி சவுகார் ஜானகியை வெறுக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் தகராறு முற்ற சிவாஜி கன்னத்தில் அறைந்ததில் சவுகார் இறந்து விட அவரை தூக்கி ரெயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு தற்கொலை நாடகமாடி இந்தியா திரும்புகிறார் சிவாஜி.
வரும் வழியில் கப்பலில் சரோஜாதேவியை(லதா) சந்திக்கிறார். தன் அன்பால் சிவாஜியை கவர்கிறார் சரோஜா தேவி. தனது ஊட்டி பங்களாவுக்கு வருமாறு சரோஜாதேவியை அழைக்கிறார். அவரும் தன் தந்தையுடன் (வி.கே.ராமசாமி) ஊட்டிக்கு செல்கிறார். காலப்போக்கில் சிவாஜியும், சரோஜாதேவியும் காதலிக்க அது திருமண நிச்சயதார்த்தம் வரை வருகிறது. நிச்சயதார்த்தத்தன்று சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்ட சவுகார் ஜானகி அவரது மாமனுடன் (எம்.ஆர்.ராதா) திரும்பி வருகிறார். அதன் பிறகு பல திருப்பங்களுடன் படம் முடியும்.
உலக சினிமாவிலிருந்து
1958ம் ஆண்டு பிரபல பிரிட்டிஷ் இயக்குனர் மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய சேஸ் ஏ குரூக்டு ஷேடோ என்ற ஆங்கில படம் உலக புகழ்பெற்றது. இந்த படத்தை தழுவி 1963ம் ஆண்டு ஷேக் அன்கா என்ற பெங்காலி படம் உருவானது. இந்த பெங்காலி படத்தில் சில மாற்றங்களை செய்து வெளிவந்ததுதான் புதிய பறவை. சிவாஜி, சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா, எஸ்.வி.ராமதாஸ், ஓ.ஏ.கே.தேவர், ஆகியோர் நடித்திருந்தனர். ஈஸ்ட்மென் கலர் தொழில்நுட்பம் வந்த புதிதில் அதனை நேர்த்தியாக கையாண்டிருந்தார் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பிரசாத். தாதா மிராஸி இயக்கி இருந்தார்.
மீண்டும் ரிலீஸ்
1964ம் ஆண்டு படம் வெளியான உடன் பெரிய வரவேற்பு இல்லை. மனைவியை கொன்றவராக சிவாஜியை மக்கள் ஏற்கவில்லை. சரோஜாதேவி சிவாஜியை காதலித்து ஏமாற்றுவதையும் மக்கள் விரும்பவில்லை. ஆனால் அதன் பிறகு மெல்ல மெல்ல மக்கள் ஏற்றார்கள். முதலில் 60 தியேட்டர்களில் ரிலீசான படம் பிறகு 100 தியேட்டர்களாக உயர்ந்தது. சென்னை பாரகான் தியேட்டரில் 132 நாட்கள் ஓடியது. புதிய பறவை வெளியான அடுத்த ஆண்டே தெலுங்கில் சிங்கப்பூர் சி.ஐ.டி என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2010ம் ஆண்டு சென்னை சாந்தி தியேட்டரில மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு 50 நாட்கள் வரை ஓடியது.
பாடல்கள்
எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து ஒரு இசை சாம்ராஜ்யத்தையே கட்டி இருந்தார்கள். "எங்கே நிம்மதி எங்கே நிம்மதி..." என்ற பாடலுக்கு நூற்றுக்கணக்கான இசை கருவிகளை பயன்படுத்தியிருந்தார்கள். இந்த பாடலுக்கான ஒளிப்பதிவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. "சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து சேர்ந்திட கண்டேனே...", "ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்...", "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்...", "பார்த்த ஞாபகம் இல்லையோ..." ஆகிய பாடல்கள் இப்போதும் ரசிகர்களை தாலாட்டிக் கொண்டிருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
* இந்தப் படத்தில் சிவாஜி அணியும் உடைகள் அனைத்தும் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டவை.
* முதலில் சரோஜாதேவி கேரக்டரில் சவுகாரும், சவுகார் கேரக்டரில் சரோஜாதேவியும் நடிப்பதாக இருந்தது. அதுவுரை குடும்ப பெண்ணாக நடித்து வந்த சவுகார் கிளப் பாடகியாக மாறுபட்ட வேடத்தில் நடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்று சிவாஜிதான் மாற்றினார். இதில் இயக்குனர் தாரா மிராசிக்கு உடன்பாடில்லை. ஆனாலும் முதலில் படமாக்கப்பட்ட பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் சவுகாரின் ஸ்டைலை பார்த்து அசந்தார் தாதா மிராசி. சிவாஜியின் கணிப்பு சரி என்ற ஒப்புக் கொண்டார்.
*சிவாஜியின் தந்தையாக இயக்குனர் தாரா மிராசி நடித்திருந்தார்.
*சிவாஜியின் சிகரெட் ஸ்டைல், நடை ஸ்டைல் பிரமாதமான ரசிக்கப்பட்டது.
*கிளைமாக்சில் சிவாஜி லதா... லதா என்று பேசும் வசனமும், சரோஜாதேவி கோபால்...கோபால் என்று உருகும் வசனமும் ரொம்ப பாப்புலர்.
*படத்தின் அத்தனை பாடல்களையும் டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசீலாவும் பாடினார்கள். அத்தனை பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.