என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
ஒரு ஆன்மிக படம், அதுவும் அனிமேஷனில் உருவான பக்தி படம் இவ்வளவு கோடி வசூலை அள்ளுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மகாவதார் நரசிம்மா படம், ரூ 210 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. ஜூலை 25ம் தேதி வெளியான இந்த படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என படக்குழு பயந்தனர். காரணம், அனிமேஷனில் உருவான ஆன்மிக படத்தை குழந்தைகள் படம் என ஒதுக்கிவிடுவார்களோ என யோசித்தனர்.
ஆனால் படத்தின் கரு, பக்தி பற்றி, நரசிம்மர், பிரகலாதன் பற்றி சொன்ன விஷயங்கள், அனிமேஷன் தரம், கிளைமாக்ஸ் மற்றும் இசை, திரைக்கதை போன்ற விஷயத்தால் இந்த படம் வெற்றி பெற ஆரம்பித்தது. 50, 100 கோடி என தொட்டு இப்போது 210 கோடியில் வந்து நிற்கிறது. இன்னும் பல கோடிகளை அள்ளும் என சொல்கிறார்கள்.
பல மொழிகளில் இந்த படம் வெளியானாலும் தெலுங்கு, இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் ஓரளவு வெற்றி. அடுத்து விஷ்ணுவின் பல அவதாரங்களை அனிமேஷனில் சொல்லப்போகிறோம். அடுத்து மகாவதார் பரசுராம் வரப்போகிறார். அவரை தொடர்ந்த மற்ற அவதாரங்கள் வரும் என்கிறார் இயக்குனர் அஸ்வின். இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே வெளியிட்டதால் கூடுதல் வரவேற்பு, பப்ளிசிட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.