தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். தற்போது தமிழில் 'சர்தார் 2', தெலுங்கில் 'தி ராஜா சாப்',. மலையாளத்தில் 'ஹிருதயபூர்வம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல சினிமா பத்திரிகையான பிலிம்பேர் வழங்கிய 'பிலிம்பேர் கிளாமர் அன்ட் ஸ்டைல் தென்னிந்தியா 2025' விருதுகளில் மாளவிகா மோகனன், “ஹாட்ஸ்டெப்பர் ஆப் த இயர்' மற்றும் 'ஹாட்டஸ்ட் ஸ்டார் ஆப் த இயர்' என்ற இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்த மாளவிகா, “ஒரே இரவில் இரண்டு விருதுகள். ஒரே இரவில் இவ்வளவு 'ஹாட்' ஆன என்று அழைக்கப்படுவதை என்னால் கையாள முடியாத அளவிற்கு இருக்கிறது,” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டா தளத்தில் எப்போதுமே தன்னுடைய 'ஹாட்' ஆன புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் மாளவிகா. பாலிவுட் நடிகைகள் கூட அந்த அளவிற்கு புகைப்படங்களைப் பதிவிடமாட்டார்கள். அதனால்தானோ என்னவோ அவருக்கு இந்த இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய விருதுகள் என்று சொன்னாலும் அதில் உள்ள பல விருதுகளையும் தெலுங்குத் திரையுலகத்தினருக்கே அளித்துள்ளார்கள். அதிசயமாக தமிழ் நடிகரான சித்தார்த் மட்டுமே விருதுப் பட்டியலில் இருக்கிறார்.