புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்தில் பலரும் திரைப்படத்துறையில் இருந்தாலும், அவரது மகன் மு.க.முத்து மட்டுமே நடிகராக முகம் காட்டினார். இந்த தலைமுறையில் ஹீரோவாக வெற்றிபெற்றவர் ஸ்டாலினின் மகன் உதயநிதிதான். தன்னுடைய தயாரிப்பில் சூர்ய நடித்த ஆதவன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தலையைக்காட்டியதன் மூலம் தன் நடிப்பு ஆசையை வெளிப்படுத்தினார் உதயநிதி.
பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் கூட்டணி அமைத்து ஹீரேவாக நடித்தார். அப்படம் வர்த்த ரீதியில் வெற்றியடைந்தது. அடுத்து சுந்தரபாண்டியன் பட இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். இது கதிர்வேலன் காதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், இப்போது நண்பேன்டா மூலம் நயன்தாராஉடன் மறுபடி இணைந்திருக்கிறார். இன்று (நவ 27) உதயநிதியின் பிறந்தநாள். தன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பேன்டா படத்தின் வித்தியாசமான மேக்கிங் வீடியோ ஸ்டைல் டீசரை வெளியிட்டிருக்கிறார் உதயநிதி. யு டியூபில் வெளியிடப்பட்ட நண்பேன்டா டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு திரைப்படத்துறையினரும் பாராட்டித்தள்ள உற்சாகத்தில் இருக்கிறார் உதயநிதி.