சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமன்னா மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க வருகிறார். விரைவில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கப் போகிறார். அவர் மீண்டும் இங்கு வருவதற்குள் அவரது திருமணத்தைப் பற்றிய வதந்திகள் முன்னதாகவே வர ஆரம்பித்து விட்டன. சமீபத்தில் தமன்னா கையில் புதிதாக ஒரு வைர மோதிரம் மின்னுகிறதாம். மிகவும் அழகாக உள்ள அந்த மோதிரத்தை தமன்னாவின் நிச்சயதார்த்த மோதிரம் என ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். நமது நடிகைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில்தான் ஒரு சிலர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் பாருங்கள்.
இந்தத் திருமண வதந்தியைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே, அதை மேலும் தீயாகப் பரவ விடாமல் தமன்னா தடுத்து விட்டார். அந்த வைர மோதிரம், அவரே டிசைன் செய்த ஒரு மோதிரமாம். அவருடைய அப்பா ஜுவல்லரி நிறுவனம் ஒன்றின் சொந்தக்காரர். மகள் செய்த டிசைனை அவருக்காகவே ஆசை ஆசையாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் அப்பா. அதற்குள் தமன்னாவிற்கு வேண்டாதவர்கள் அதை வைத்து ஒரு கதையை உருவாக்கி விட்டார்கள். தமன்னாவே தமிழ்லயும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கணும்னு திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார். அப்படி என்ன வயதாயிற்று இப்போது திருமணம் செய்து கொள்வதற்கு, என தமன்னாவிற்கு நெருக்கமானவர்கள் கேட்கிறார்களாம். தமிழ்ப் பக்கம் அழகான ஹீரோயின்களுக்கு தட்டுப்பாடாக இருக்கிற நேரத்தில் இப்படி தாறுமாறாக வதந்திகளைக் கிளப்பி விடுபவர்களை என்ன செய்வது....?