‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தல55 படத்தின் வரவுக்காக பொங்கலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதுதான் அஜித் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு. ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாத்துறையினரும் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயமும் இதுதான். ஆரம்பம் படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்பு வரை படத்தின் தலைப்பு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதேபோன்ற சஸ்பென்ஸை தற்போதும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தல55 படத்திற்கு சத்யதேவ் என தலைப்பு வைக்கப்படுவதற்கு சாத்தியம் அதிகம் என்று கேள்வி. இப்படத்தில் 12 வயது முதல் 38 வயது வரை பயணிக்கும் அஜித்தின் கேரக்டருக்கு சத்யதேவ் என பெயர் வைத்திருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதுதான் இந்த யூகத்துக்கு காரணம். தல 55 படத்தின் தலைப்பு சஸ்பென்ஸ் ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் அப்படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் கசிந்திருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாயாம். அஜித் படத்தைப் பொறுத்தவரை இது சாதாரண தொகைதான். ஆனால், இயக்குனர் கௌதம் மேனனைப் பொறுத்தவரை, அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாம். எனவே, இப்படம் தனக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இப்படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் மொத்தம் 5 பாடல்களை உருவாக்கியிருக்கிறார். அதில் அதாரு அதாரு... உதாரு... உதாரு என்ற அஜித்திற்காக அறிமுகப்பாடலும் உண்டு. இந்தப்பாடலுக்கு சதீஷ் நடனம் அமைத்திருக்கிறார்.