சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த கேத்ரின் தெரசா, அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில், புக்காகி விட்டார். அதனால், தன் தாய்மொழியான, மலையாள சினிமாவில் இருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள அவர், சில முன்னணி ஹீரோயின்களுக்கு பலத்த அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். இதுபற்றி கேத்ரின் தெரசா கூறும்போது, தமிழில் நான் நடித்த முதல் படமே ஹிட்டாகி இருப்பதால், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கிடைத்துள்ளது. அதோடு தமன்னா, காஜல் அகர்வால் நடித்தது போன்று நடிக்கும்படியும் டைரக்டர்கள் கேட்டுக் கொள்கின்றனர். அதனால், எனக்கென்று எந்த பாணியும் இன்னும் உருவாகாததால், டைரக்டர்கள் சொல்வது போன்று நடித்து, தமிழில் முன்னணி இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என்கிறார் அவர். கேத்ரின் தெரசாவின் இந்த முடிவு, மார்க்கெட்டில் இருக்கும் தமன்னா, காஜல் அகர்வாலை பலத்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.