100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தமிழில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் என பல படங்களில் நடித்த ஸ்ரேயா ரெட்டி அதையடுத்து, பூப்பறிக்க வருகிறோம், லவ் மேரேஜ் உள்பட சில படங்களில் நடித்த விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
திருமணத்திற்கு முன்பு தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஸ்ரேயா ரெட்டி நடித்தபோதும், விஷாலுடன் அவர் நடித்த திமிரு படம் மட்டும் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. காரணம், அந்த படத்தில் பெண் ரவுடியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளாக நடிப்பை விட்டு முற்றிலுமாக விலகியிருந்த அவரை, தற்போது அண்டாவக்காணோம் படம் மூலம் மீண்டும் களத்தில் இறக்கி விட்டுள்ளனர். இப்படத்தில் திருமணமான பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயாரெட்டி, திமிரு படத்துக்கு இணையான ஒரு அதிரடியான வேடத்தில்தான் நடிக்கிறாராம். ஒரு காட்சியில் அவர் துடப்பக்கட்டையை கையில் வைத்துக்கொண்டு சண்டையில் வரிந்து கட்டிக்கெண்டு இறங்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகின்றனர்.