சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி நடிக்க உள்ளாராம். மனோஜ் பாரதி சில படங்களில் நாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். சமீபத்தில் அப்பா பாரதிராஜா இயக்கத்தில் வந்த 'அன்னக்கொடி' படத்தில் கூட வில்லனாக நடித்தார். ஆனால், அவரால் ஒரு நடிகராக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அவர் நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார்.
நீண்ட நாட்களாகவே ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாராம். தற்போது மாபெரும் வெற்றி பெற்ற அப்பாவின் படத்தையே ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம். இன்றைய காலத்திற்கும் பொருத்தமான படமாக இருக்கும் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். கமல்ஹாசனுக்கு ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த '16 வயதினிலே' படத்தை இயக்கிய பாரதிராஜாவின் மகன் என்பதால் ஸ்ருதிஹாசனும் நடிக்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கிறார்களாம். இயக்குனராகவாவது மனோஜ் பாரதி ஜெயிக்கட்டும்.