சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுடன் ஊர் சுற்றி வரும் பிரகாஷ் ராஜூக்கு, அவரது புது உறவாவது சந்தோஷம் கொடுக்கட்டும் என்று முன்னாள் மனைவி லலிதா குமாரி கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மனைவி லலிதா குமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்தார். பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுடனான காதல் காரணமாக ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், விவாகரத்துக்கு பிறகு பிரகாஷ் ராஜ் தனது காதலி போனி வர்மாவுடன் ஊர் சுற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் போனிவர்மாவுடன் கைகோர்த்தபடி பங்கேற்ற பிரகாஷ் ராஜ், தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதுடன், விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகிறீர்களாமே? என்ற கேள்விக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சென்றார்.
விரைவில் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதுபற்றி பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். "பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். பெங்களூரில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களும் என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு போனிவர்மாவுடன் உள்ள தொடர்பை எனது முன்னாள் கணவர் பிரகடனப்படுத்தி இருப்பது பற்றிசொன்னார்கள். இந்த புது உறவானது அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கட்டும். யாருடனிருந்தாலும் அவர் சந்தோஷமாக இருந்தால் போதும். எனது இரு மகள்களின் எதிர்காலம்தான் எனக்கு இப்போது முக்கியம். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்" என்று லலிதா குமாரி கூறியுள்ளார்.