இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
பா.விஜய், சினேகன், தாமரை போன்ற பாடலாசிரியர்கள் மீது திரையுலகில் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இவர்கள் அநியாயத்துக்கு பந்தா காட்டியது மட்டுமல்ல, தங்களின் பாடல்களினால்தான் படங்களே வெற்றியடைவதாக இறுமாப்பிலும் இருந்தனராம். அதன் காரணமாக பாடல் எழுத இவர்களைத் தேடிவரும் அப்பாவி தயாரிப்பாளர்களிடம் பெரும் தொகையையும் பில் போட்டனர். இவர்களுக்கு செமத்தியாய் செக் வைத்து வீட்டில் சும்மா உட்கார வைத்தவர்கள் இருவர்.
ஒருவர் நா.முத்துகுமார். மற்றொருவர் மதன்கார்க்கி. முன்னவர் காதல் ஸ்பெஷலிஸ்ட் என்றால், அடுத்தவர் அறிவியல் அறிஞர். அறிவியலையும், தமிழையும் கலந்து மதன் கார்க்கி எழுதும் பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. சர்வானந்த், நித்யா மேனன் நடித்துள்ள ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் மதன்கார்க்கி அறிவியல் தமிழில் அசத்தலான பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார்.
ஹேய்..ஃபேஸ்புக் லாகின் பண்ணு..! - என்று தொடங்கும் பாடலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரும், மேகாவும் பாடியுள்ளனர். இப்பாடல் காட்சியில் சர்வானந்த் உடன், அவானா, மேக்னா என இரு மும்பை அழகிகள் நடனமாடி இருக்கின்றனர்.
மதன் கார்க்கி பற்றி கூடுதல் தகவல் ஒன்று...அண்மையில் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த கூகுள் கிளாஸை வாங்கி இருக்கிறார் மதன் கார்க்கி. இதன் விலை ஒரு லட்ச ரூபாய். தமிழ்சினிமா பிரபலங்களில் கூகுள் கிளாஸ் வைத்திருக்கும் ஒரே பிரபலம் இவர்தான்.