குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் அவரது படப்பிடிப்பை இங்கு நடத்த விட மாட்டோம் என்று சில கர்நாடக அமைப்புகள் அறிவித்து சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருகிறது. "எந்த சூழ்நிலையிலும் கர்நாடகாவிலிருந்து படப்பிடிப்பை மாற்ற மாட்டோம்" என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த எதிர்ப்பும், போராட்டங்களும் விளம்பரத்திற்காகவும், வேறு சில விஷயங்களுக்காகவும் செய்யப்படுகிறது. ரஜினி எந்த அளவுக்கு கர்நாடக மக்களை நேசிக்கிறார் என்பது கர்நாடக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கர்நாடக மக்களும் ரஜினியை அன்புடன் நேசிக்கிறார்கள். கர்நாடக முழுவதும் ரஜினியின் நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள். வீட்டுவசதிதுறை அமைச்சர் அம்ரீஷ் போன்ற அரசியல் பிரமுகர்களும் ரஜினிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எக்காரணம் கொண்டும் லிங்கா படப்பிடிப்பை கர்நாடகாவை விட்டு வேறு இடத்துக்கு மாற்ற மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லிங்கா படப்பிடிப்புகள் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. அம்ரீஷ் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரமுகர்களும் போராடும் கன்னட அமைப்புகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.