புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா |
ஆர்யா நடித்து வரும் மீகாமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்து வருகிறார். தமன் மியூசிக், சதீஷ்குமார் கேமராமேன். ஹீரோயின் இல்லாமலே ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து விட்டது.
இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன், த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா என பல ஹீரோயின்களுடன் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் இவர்கள் நடிக்க முடியவில்லை. இப்போது ஹன்சிகா நடிப்பது என்று முடிவாகியுள்ளது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் வருகிற 5ந் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொண்டு ஹன்சிகா நடிக்க உள்ளார்.