‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
காமெடி நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்த மற்ற அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இதனால் பல்வேறு அமைப்பினர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டை நேற்று (நவம்பர் 30) தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினர் முற்றுகையிட்டனர். மாநில தலைவர் வி.பி.தேவன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்காக 50 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் 30 பேரும் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னார் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
"தேவர் இனத்திற்கு சம்பந்தமில்லாத கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி விளம்பரம் தேட முயற்சிக்கிறார். அதனை கலைக்க நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இனியும் அவர் அதை செய்யாவிட்டால் மாநில அளவில் தொண்டர்களை திரட்டி போராடுவோம்" என்கிறார் போராட்ட தலைவர் வி.பி.தேவன்.