எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை ரஷ்ய நாடு கொண்டாடுகிறது. இந்தியாவைப்போலவே ரஷ்யாவிலும் சினிமா ரசிகர்கள் அதிகம். இந்திய படங்களை அவர்கள் விரும்பி பார்ப்பார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் ரஷிய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு திரையிடப்பட்டது. தில்லானா மோனாம்பாள், முதல் மரியாதை, தண்ணீர் தண்ணீர், கடலோர கவிதைகள், முந்தானை முடிச்சு படங்கள் சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது. தற்பொது 75 சதவிகித படம் ரஷ்யாவில் எடுக்கப்பட்ட இரண்டாம் உலகம் ரஷ்யாவில் பேசப்படும் நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 6ந் தேதி முதல் 8ந் தேதி வரை ரஷ்யாவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் தமிழ் படங்கள் கலந்து கொள்கின்றன. இதுபற்றி இந்திய-ரஷ்ய நட்புறவு கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கப்பன் கூறியதாவது: "உலகிலேயே அதிக சினிமா ரசிகர்களும், தியேட்டர்களும் உள்ள நாடு ரஷ்யா. ரஷ்யர்கள் ஹாலிவுட் படங்களை விட இந்திய படங்களையே விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்திப் படங்கள். அமிதாப்பச்சன், ராஜ் கபூருக்கு அங்கே தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இப்போது ரன்தீர் கபூரை ரசிக்கிறார்கள்.
ரஷியர்களுக்கு தமிழ் பட அனுபவம் இருக்கிறது. அதனால் இந்த சினிமா நூற்றாண்டு விழாவில் 6 தமிழ் படங்கள் திரையிட அனுமதி பெற்றிருக்கிறேன். ஆடுகளம், வேட்டையாடு விளையாடு படங்கள் உறுதியாகி இருக்கிறது. துப்பாக்கி, கும்கி, கர்ணன், உதிரிபூக்கள், 16 வயதினிலே படங்களுக்கு முயற்சி செய்து வருகிறேன். முன்னணி திரைக் கலைஞர்களையும் அழைத்துச் செல்ல இருக்கிறோம்" என்றார்.