நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் |
மனம்கொத்தி பறவை படத்திற்கு பிறகு எழில் இயக்கி இருக்கும் படம் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி ஜோடியாக நடித்துள்ளனர். காமெடி ரோலில் பரோட்டா சூரி அசத்தியுள்ளார். விமல் இப்படத்தில் இதயக்கனி என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., ரசிகனாக வருகிறார். காமெடி மற்றும் காதல் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை மதன் தயாரித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று படம் வெளியாகிறது.