சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

மலையாளத்தில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷேன் நிகம். தமிழில் 'மெட்ராஸ் காரன், ஒரு லிட்டர்' என சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் தற்போது 'ஹால்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்சார் சான்றுகளுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் படத்தில் பீப் பிரியாணி காட்சி உட்பட மொத்தம் ஆறு காட்சிகளை நீக்கினால் மட்டுமே சான்றிதழ் தர முடியும் என சென்சார் போட்டு அறிவுறுத்தியது.
இதற்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார். படம் பார்த்த கீழமை நீதிமன்ற நீதிபதி படத்தில் பிரச்னைக்குரிய அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் கூறி ஆறு இடங்களில் காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சென்சார் போர்டு கூறியதில் நான்கு விஷயங்களை ஒதுக்கி தள்ளி விட்டு இரண்டு காட்சிகளை மட்டும் வெட்டினால் போதும் என கூறினார்.
இதனை எதிர்த்து சென்சார் போட்டு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதனை தொடர்ந்து இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு நேற்று அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை, படத்தை நாங்கள் ரசித்துப் பார்த்தோம். கீழமை நீதிமன்ற உத்தரவுப்படி சென்சார் சான்றிதழை வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து படக் குழுவினர் தங்களது படம் சென்சார் தடைகளை தாண்டி கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது என்கிற தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.