மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமா உள்ளிட்ட மற்ற மொழி சினிமாக்களிலும் சமீப காலங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது சில சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளில் ஒரு 'நெறிமுறை' என்பது இருக்கும். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்கள் வைத்திருப்பவர்கள், இன்புளூயன்சர்கள், யு டியூபர்கள் ஆகியோரும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு அழைக்கப்பட்டு கலந்து கொள்கிறார்கள். அவர்கள் கேட்கும் சில அபத்தமான கேள்விகள் மற்ற முறையான பத்திரிகையாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இப்படி ஒரு சம்பவம் ஐதராபாத்தில் நடந்த 'டியூட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்திருக்கிறது. ஒரு பெண் பத்திரிகையாளர் (?), படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதனைப் பார்த்து, “நீங்கள் ஹீரோ மெட்டீரியலே கிடையாது, உங்களுக்கு அந்த தோற்றமே இல்லை,” என விமர்சித்திருக்கிறார்.
அதைக் கேட்டுக் கோபப்படாத பிரதீப், “படம் பார்க்கும் ரசிகர்கள் என்னுடன் 'கனெக்ட்' செய்து கொள்கிறார்கள். நான் சாதாரண மனிதனைப் போல என் படத்தில் இருப்பதுதான் அதற்குக் காரணம்,” என்று பொறுமையாக பதிலளித்துள்ளார்.
இயக்குனராக 'கோமாளி' என்ற வெற்றிப் படத்தையும், இயக்குனர் மற்றும் கதாநாயகனாக 'லவ் டுடே' வெற்றிப் படத்தையும், நடிகராக 'டிராகன்' என்ற வெற்றிப் படத்தையும் என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்துள்ளவர் பிரதீப். அவரைப் பார்த்து ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகியோரும் ஆரம்ப காலத்தில் அவர்களது தோற்றத்தை வைத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள் தான். ஆனால், அதன் பின் அவர்கள் டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தார்கள். இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதீப் நாயகனாக நடித்துள்ள 'டியூட்' படம் அடுத்த வாரம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.