பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இந்தியத் திரையுலகம் என்று சொன்னாலே வெளிநாடுகளில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஹிந்தித் திரைப்படங்கள் என்றுதான் அதிகம் தெரியும். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மற்ற மொழிப் படங்களைப் பற்றியும் தெரிய ஆரம்பித்தது. அதன்பின் இந்திய சினிமாவில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் டாப் 10 வசூலைப் பெற்ற படங்களாக தென்னிந்தியப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஒரு ஹிந்திப் படம் கூட இல்லை என்பது ஆச்சரியமான ஒரு செய்தியாகவே இருக்கிறது.
டாப் 10ல் உள்ள அந்தப் படங்கள்…
புஷ்பா 2 - 294 கோடி
ஆர்ஆர்ஆர் - 223 கோடி
பாகுபலி 2 - 210 கோடி
கல்கி 2898 ஏடி - 191.5 கோடி
கேம் சேஞ்ஜர் - 186 கோடி
சலார் - 178.7 கோடி
தேவரா - 172 கோடி
கேஜிஎப் 2 - 160 கோடி
ஓஜி - 154 கோடி
கூலி - 151 கோடி
இந்த டாப் 10 படங்களின் பட்டியலில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது உண்மையான வசூல் நிலவரம் அல்ல, தயாரிப்பு நிறுவனம் பொய்யான ஒன்றையே அறிவித்தது என்று பலரும் விமர்சித்தார்கள். ஏனென்றால் படம் வெளியான இரண்டாது நாளிலேயே அதன் வசூல் அதலபாதாளத்திற்குச் சென்றது.
நேற்று முன்தினம் வெளியான 'ஓஜி' தெலுங்குப் படத்தின் முதல் நாள் வசூல் வருவதற்கு முன்பாக விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படம் 148.5 கோடி வசூலுடன் 10வது இடத்தில் இருந்தது.
வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள 'காந்தாரா சாப்டர் 1' கன்னடப் படமும் முதல் நாளில் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்த டாப் 10 வரிசையில் அடுத்த சில நாட்களில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. அதில் 'கூலி' படம் விலகி, டாப் 10ல் 'காந்தாரா சாப்டர் 1' இடம் பெறலாம். அப்படி நடந்தால் தெலுங்கு, கன்னடப் படங்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இருக்கும். அடுத்து விஜய்யின் 'ஜனநாயகன்', ரஜினியின் 'ஜெயிலர் 2' வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.




