பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் மதராஸி. சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் இணைந்து நடித்துள்ள இந்த படம் இதுவரை 70 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மதராஸி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்த முருகதாஸ் படம் திரைக்கு வந்ததும் பழனி கோவிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், அஜித் நடிப்பில் நான் இயக்கிய முதல் படமான தீனா படத்திற்கு பிறகு இந்த மதராஸி படத்தை இயக்கும்போதுதான் பழனி முருகனுக்கு வேண்டுதல் செய்திருந்தேன். அதோடு, தீனா படத்துக்கு பிறகு மொட்டை போடவில்லை. என்றாலும் பழனி கோவிலுக்கு சென்று வருவேன். மதராஸி படத்திற்கு பிறகு தலையில் மொட்டை போட்டு உள்ளேன். காரணம் இந்த படமும் எனக்கு முதல் படம் போலதான் என்று கூறியுள்ளார் முருகதாஸ்.
முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் இயக்கிய தர்பார் படம் 2020ம் ஆண்டில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில், அதையடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் இயக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிக்கந்தர் படமும் தோல்வியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் தான் மதராஸி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியை கொடுத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.